தொடர்புடைய செய்திகள்
- சரவெடி பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை! – தமிழக அரசு எச்சரிக்கை!
- குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் சீண்டல்! – இருவர் கைது!
- தீபாவளியன்று இறைச்சி கடைகள் இயங்க அனுமதி! – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
- முகமது ஷமியை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள்”: விராட் கோலி
- டி-20 உலககோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி
டாஸ்மாக் பார்கள் நாளை முதல் திறப்பு! – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டபோது டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பார்கள் திறக்கப்படாமலிருந்தது.
இந்நிலையில் நாளை நவம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்களில் மது அருந்துபவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மது அருந்த வருபவர்களின் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும். பார்களில் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
