1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry allowed thaeters for 100 percent occupancy

திரையரங்குகளில் 100% அனுமதி, திருவிழாவுக்கு அனுமதி! – புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி!

Tamilnadu
புதுச்சேரியில் நாளை முதல் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீடித்துள்ளது புதுச்சேரி அரசு.

தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி புதுச்சேரியில் திரையரங்குகள் 100% செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
என்ன ரஜினி.. எப்படி இருக்கீங்க! – நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!