ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (20:21 IST)

திமுக எந்தப் பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை – ஹெச் ராஜாவுக்குக் கனிமொழி பதில் !

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திணிப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியதை அடுத்து ஹெச் ராஜா திமுகவினர் நடத்தும் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததும் புதியக் கல்விக் கொள்கையை கொண்டு வர இருக்கிறது. இதற்குப் பலமான எதிர்ப்பு எழுந்துள்ளதால் அதில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்திக் கற்பிக்கப்படுவதை சூட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் கேள்வி எழுப்பியபோது ‘திமுக எந்த பள்ளிகளையும் நடத்தவில்லை. தனிநபர்கள் நடத்தும் பள்ளிகள் குறித்து திமுக கருத்துக் கூற முடியாது. திமுக பள்ளிக் கூடம் நடத்தினால் அதில் நிச்சயம் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் அமலில் இருக்கும்.’ எனக் கூறியுள்ளார்.