செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (07:33 IST)

அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத்தலைமை கோஷம்: பின்னணியில் ஓபிஎஸ்?

அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை இருப்பதால் யாருடைய கருத்தை தொண்டர்கள் ஏற்கவேண்டும் என்ற குழப்பம் இருப்பதாகவும், ஜெயலலிதா போன்று ஒற்றை தலைமை இருந்தால் தான் அதிமுக மீண்டும் எழுச்சி பெற முடியும் என்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருதி வருகின்றனர்.
 
இதனை உறுதி செய்வது போன்று நேற்று அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார். இவருடைய கருத்து அதிமுக தலைவர்களை பரபரக்க செய்தது. இதுகுறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே மழுப்பலான பதிலை கூறினாலும் ஒற்றைத்தலைமை குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை
 
இந்த நிலையில் ராஜன்செல்லப்பாவை அடுத்து கே.சி.பழனிச்சாமியும் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ராஜன்செல்லப்பாவின் கருத்தை தான் வரவேற்பதாக கூறியுள்ள கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்ய உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
ஒற்றை தலைமை பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாகவும், முதல்வர் பதவி அல்லது அதிமுக பொதுச்செயலாளர் பதவி இரண்டில் ஒன்றை பெற வேண்டியே அவர் திட்டமிட்டு காயை நகர்த்தி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன