செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (11:24 IST)

திமுக எந்த பள்ளியையும் நடத்தவில்லை: முழுப்பூசணிக்காயை மறைக்கும் கனிமொழி!

ஒருபுறம் திமுக இருமொழிகொள்கை என்ற வகையில் இந்தியை எதிர்த்து வரும் நிலையில் திமுக தலைவர்களும், தலைவர்களின் வாரிசுகளும் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கற்பித்து வரும் முரண்பாடுகள் குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். அரசு பள்ளியில் இலவசமாக இந்தி படிக்கும் வாய்ப்பை கெடுக்கும் திமுக, தாங்கள் நடத்தும் தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் பெற்று இந்தியை கற்பித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது
 
இந்த நிலையில் இன்று இதுகுறித்து கருத்து கூறிய திமுக எம்பி கனிமொழி, 'திமுக எந்த பள்ளியையும் நடத்தவில்லை, அப்படி ஒருவேளை பள்ளி நடத்தினால் அந்த பள்ளியில் இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என கூறினார். மேலும் தனியார் பள்ளிகள் குறித்து தான் கருத்து தெரிவிக்க் விரும்பவில்லை என திமுகவினர்கள் வாரிசுகள் நடத்தும் பள்ளிகள் குறித்து கனிமொழி எம்பி கூறியுள்ளார். 
 
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் உள்பட பல திமுகவினர்களும் திமுகவின் வாரிசுகளும் பள்ளிகள் நடத்தி வருவதும், அந்த பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டும் வரும் நிலையில் அரசியல் லாபத்திற்காகவே திமுக, இந்தியை எதிர்த்து வருவதாகவும் கனிமொழியின் இந்த கருத்து முழுப்பூசணிக்கையை சோற்றில் மறைக்க செய்யும் முயற்சி என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.