புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (10:50 IST)

திமுகவினர் இடையே சரமாரி அடிதடி... அரிவாள் வெட்டு : பரபரப்பு தகவல்

சென்னை பெரம்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ ஆர். டி.சேகர் தம் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 
எம்.எல்.ஏ சென்றுவிட்ட பிறகு,  34 வது வட்ட துணைசெயலாளர் கார்த்திபன் (35)ரிடம், 34 வது வட்ட திமுக செயலாளர் தனசேகர் (52)அலுவலம் அமைந்துள்ள ( காமராஜ் சாலையில் ) எம்.ஏ.வை வராமல் தடுத்துவிட்டதாகக் கூறி தட்டிக்கேட்டார்.
 
இதையடுத்து இவ்விருவருக்கும் தகராறி ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் பீறிட்ட கார்த்திபன் தனது ஆதரவாளர்களைக் கூட்டிக்கொண்டு தனசேகர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார்.
 
இந்த உள்கட்சி மோதலால் கார்த்திபன் மற்றும் தனசேகர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். தற்போது தனசேகர் கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்றுவருகின்றனர்.
 
பின்னர், கார்த்திபன் கோஷ்டியினர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் புகுந்த தன்சேகர் ஆதரவாளர்கள் கார்த்திபன் மற்றும் அவரது ஆதவரவாளர்களை கடுமையாகத் தாக்கினர்.அப்போது தனசேகரின் ஆதரவாளரான மதுரை என்பவர் தாக்குதலுக்கு உள்ளானார்.இதையடுத்து மதுரையின் மகன் விக்னேஷ் (23) சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திய்பனின் ஆதரவாளரான ரமேஷ் என்பவரை வெட்டினார்.
 
இதனையடுத்து திமுகவினர் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலிஸார் விக்னேஷை பிடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இவ்விரு தரப்பினரையும் எம்.எல்.ஏ ஆர் டி சேகர் மருத்துவமனைக்குச் சென்று பார்ர்த்துவந்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதில்ய்ல் உள்ள மக்கள் மற்றும் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.