1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (12:13 IST)

நீதிமன்ற முடிவுக்கு வரவேற்பு; உண்மைகள் வெளிவரட்டும்! – கமல்ஹாசன் ட்வீட்!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் முடிவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் உளவு செயலியான பெகாசஸை பயன்படுத்தி இந்திய அரசு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.