1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (11:26 IST)

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு!

திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்தவரான அருண்குமார் என்ற மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ஐதராபாத் ஐஐடியில் படிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.