1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (17:08 IST)

மக்கர் பண்ணிய மைக்; கடுப்பில் டார்ச் லைட்டை வீசிய கமல்ஹாசன்!

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மைக் வொர்க் ஆகாததால் கமல்ஹாசன் டார்ச்லைட்டை தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரில் மநீம வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டிருந்த நிலையில் மைக் சரியாக வொர்க் ஆகாததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் வண்டியில் இருந்தவரிடம் கோபமாக பேசியதுடன் கையில் இருந்த தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டையும் வேகமாக தூக்கி எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.