1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal request MK Stalin to consider about Ford

ஃபோர்டு ஊழியர்களில் நிலைக்கு என்ன பதில்? கமல் முதல்வருக்கு வேண்டுகோள்!

ஃபோர்டு நிறுவன ஊழியர்கள்
ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என கமல் கோரிக்கை. 

 
சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில்  மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் இது குறித்து முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஃபோர்டு நிர்வாகத்தின் திடீர் முடிவால் நேரடி, மறைமுக ஊழியர்கள், குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பெரியார் பிறந்த நாள் அன்று ராகுல்காந்தியின் டுவிட்!