1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal request for Sub Urban Railway for students

மாணவர்களுக்காக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: கமல் ட்விட்!

கமல்
புறநகர் ரயில்களை இயக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் ஹாஸ்டலில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. 
 
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சரியாக இயக்கப்படாததால் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயங்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் ரயில்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. 
 
கல்லூரி மாணவர்களுக்கான அடையாள அட்டையை காட்டியும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரயில்வே நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
About Writer
Sugapriya Prakash