அறிவுள்ள அரசியல்வாதியா இருந்தா அப்படி சொல்லிருப்பார்! – கமலை பங்கம் செய்யும் ஜெயக்குமார்!
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் விவகாரத்தில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவர் மீதான புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சூரப்பா நியாயமானவர், அவர் மீது அளிக்கப்படும் புகார்கள் அரசில் உள்நோக்கம் கொண்டது என்ற ரீதியில் பேசியிருந்ததுடன், ஆளும் அதிமுக கட்சி குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்து குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சூரப்பா மீதான புகார்களை தனி ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. கமல்ஹாசன் யாருடைய அழுத்தத்தால் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என தெரியவில்லை. அறிவார்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால் ஆணையம் முடிவெடுக்கட்டும் என்று சொல்லியிருப்பார்” என்று கூறியுள்ளார்.