1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (09:03 IST)

யாரை கண்டு அஞ்சுகிறது தமிழக அரசு? கமல் கேள்வி!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசு யாரை கண்டு அஞ்சுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். 

 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கிராம  சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.  இதற்கு கோவிட்டை காரணம் காட்டியிருக்கிறது. ஆனால், குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா. உண்மையில் இந்த அரசு யாருக்கு  பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.