செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:08 IST)

பொதுத்தேர்வில் மாற்றங்கள்: நல்ல செய்தி சொன்ன செங்கோட்டையன்!

கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.  
 
மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது.  
 
இந்நிலையில் சேலத்தில் இரண்டு மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிக்ச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதனிடையே கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.