சோத்துக்கு கையேந்திய சசிகலா: புகழேந்தி வேதனை!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 26 ஜனவரி 2021 (13:21 IST)
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்காக அலைகின்றனர் என புகழேந்தி தெரிவித்துள்ளார். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.  
 
தற்போதைய நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலா திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி (நாளை) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இதனிடையே சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. பெங்களூரு சிறைச்சாலையில், கடந்த 4 ஆண்டுகளாக அவர் சாதாரண வகுப்பில் இருந்தார். முதல் வகுப்புக்கு தகுதி இருந்தும், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விபரங்களை, அவரது குடும்பத்தினர் சிறைத்துறையிடம் ஒப்படைக்காததால், சாதாரண வகுப்பில் தங்க நேரிட்டது. 
 
சாப்பாட்டுக்காக சாதாரண கைதிகளோடு வரிசையில் நின்றதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்காக அலைகின்றனர் என புகழேந்தி தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :