செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:31 IST)

முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!

சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் கையில் வேலை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் மறுப்பு பேசிய இயக்கத்திலிருந்து வந்தவர் இன்று ஓட்டுக்காக வேலை கையில் எடுப்பதாக மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் வேலை ஏந்தினாலும் அவருக்கு முருகன் அருள்தரமாட்டார் என விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் திருச்சி மாவட்ட செயலாளருமான கே என் நேரு, நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ‘ருள் தருவதற்கு, முதல்வருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட்டா கொடுத்துள்ளார்?  எங்களுக்கும் முருகன் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். யாருக்கு அருள்தரவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது முருகன். அவரின் அருளால் நாங்கள் வெற்றி பெறுவோம்’ எனக் கூறியுள்ளார்.