செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:31 IST)

கிராம சபைக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – கமல் கண்டனம்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் தேர்தல் நெருங்குவதால் திமுக, மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கிராம சபைக் கூட்டங்களை அதிகளவில் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவைக் காரணம் காட்டி அந்த கூட்டங்கள் நடக்க அனுமதி மறுத்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் ‘கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?’ எனத் தெரிவித்துள்ளார்.