வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (13:48 IST)

நான் சும்மா இருக்க மாட்டேன்.. சூரப்பாவிற்கு கமல் ஆதரவு குரல்!

நான் சும்மா இருக்க மாட்டேன்.. சூரப்பாவிற்கு கமல் ஆதரவு குரல்!
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார்கள் குவிந்துள்ள நிலையில் அந்த புகார்களை விசாரிக்க சமீபத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்தது. 
 
இந்நிலையில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூரப்பாவின் கொள்கைச்சார்புகள், அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
இதோ அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ...