வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:26 IST)

ஆதரவு கேட்கும் திட்டத்தில் மண்! கூட்டணிக்கு பேசலாமா? – மய்யத்தார் யோசனை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம் என மக்கள் நீதி மய்யம் கூறியிருந்த நிலையில் ரஜினி கட்சி தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவை தேர்தலில் ஓரளவு வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்திருந்தாலும் தற்போதைய சட்டமன்ற தேர்தல் அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இதனால் முன்னதாக ஆலோசித்த கமல்ஹாசன் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலில் களம் காண்கிறார். ஆனால் மக்கள் நீதி மய்யம் தனித்து நின்று தேர்தலை சந்திக்க முடியாது என்பதால் சிறிய கட்சிகள், உள்ளூர் பிரபலங்கள், வேறு கட்சி பிரபலங்களை மய்யத்தில் இணைய அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் தேவைப்பட்டால் ரஜினியின் ஆதரவையும் பெறுவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி புதிதாக கட்சி தொடங்கவுள்ளது மக்கள் நீதி மய்யத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. வாக்குகள் சிதறுவதை தவிர்க்க மய்யம் ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.