1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (07:38 IST)

நடிகை ஏற்றிய கொடி திடீரென விழுந்தது: கமல் கட்சியினர் இடையே பரபரப்பு!

நடிகை ஏற்றிய கொடி திடீரென விழுந்தது: கமல் கட்சியினர் இடையே பரபரப்பு!
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார் என்பதும் அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா அவ்வப்போது தங்களது கட்சியின் கொடியை பல இடங்களில் ஏற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீபிரியா கட்சியின் கொடியை ஏற்றிய போது திடீரென கயிற்றிலிருந்து அவிழ்ந்து கொடி கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 
இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கொடியை கொடி கம்பத்தில் கொடியை சரியாக காட்டினார். அதன் பின்னர் நடிகை ஸ்ரீபிரியா கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கொடியேற்றும் நிகழ்வில் பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன் அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது