வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (12:54 IST)

தீர்வுகள் தர தெரியாதவர்களுக்கு அதிகாரம் எதற்கு: கமல்ஹாசன் காட்டம்!

தீர்வுகள் தர தெரியாதவர்களுக்கு அதிகாரம் எதற்கு என கமல்ஹாசன் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி மீது அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தீர்வுகளை தர தெரியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசிகள் இல்லை, ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்
 
தீர்வுகளை தர முடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்கு உரியது என பிரதமர் மோடி மீது கமல்ஹாசன் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.