செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (08:41 IST)

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய கமீலா நாசர்!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் தன் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போது அவரது சினிமா உலகின் நெருங்கிய நட்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் கட்சியின் உயர்நிலைப் பதவி அளிக்கப்பட்டது. அந்த வகையில் கமலின் நண்பர் நாசரின் மனைவி கமீலா நாசருக்கு மாநிலச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது கமீலா நாசர் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிக்க, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.