திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (21:33 IST)

புயல் போல் வீசி வருகிறது கொரோனா 2வது அலை: பிரதமர் மோடி உரை

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

 
மத்திய மாநில அரசுகள் தனியார் துறை இணைந்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று உலகிலேயே விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் தான் கிடைக்கிறது. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் மாநிலங்கள் தனியார் துறையால் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளது
 
கடினமான சூழ்நிலைகளில் நாம் உறுதி இழந்து விட வேண்டாம். இந்த இரண்டாவது அலையையும் இந்தியா வெற்றி கொள்ளும். ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த சவாலை விரைந்து சமாளிப்போம். எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். இந்த இக்கட்டான நேரத்தில் தேசத்துடன் நான் துணை நிற்கிறேன். கடைசி ஆயுதமாக மட்டுமே லாக்டவுன் பிறப்பிக்கப்படும்’ என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்