வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 8 பிப்ரவரி 2026 (11:07 IST)

அதே டெய்லர்.. அதே வாடகை!.. விஜயை காப்பிகேட் பண்ணுகிறதா திமுக?!.. வச்சு செய்யும் தவெகவினர்!..

vijay stalin
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பேசுவது,  மாநாடு நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துவது என பல வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நேற்று விருதுநகரில் நடைபெற்றது..

இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கான திமுகவினரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது போலவே நடந்தது.

அதாவது இரண்டு பக்கமும் கூட்டம் அமர்ந்திருக்க நடுவில் மேடை அமைத்து அதில் முக ஸ்டாலின் ராம்ப் வாக் செய்தார். அப்போது பலரும் துண்டுகளை தூக்கி வீச அதை கழுத்தில் இருந்து அணிந்து கொண்டார்.. இதை ஏற்கனவே விஜய் செய்திருந்தார். அதேபோல் கூட்டம் முடிந்த போது விஜய் எப்படி மாநாட்டில் செல்பி எடுத்தாரோ அதேபோல தொண்டர்களை வைத்து உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்தார்..
vijay stalin

இதை கையிலெடுத்த தவெகவினர் எங்கள் தலைவரை திமுக காப்பி அடித்திருக்கிறது. அவர் என்னென்ன செய்தாரோ அதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் செய்திருக்கிறார்கள்.. விஜய் என்ன கலரில் பேண்ட் அணிந்தாரோ அதே கலர் பேண்டை முதல்வர் ஸ்டாலினும் அணிந்திருக்கிறார் என்று சொல்லி இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்திருக்கிறார்கள்.