ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 பிப்ரவரி 2026 (11:39 IST)

திமுகவுக்கு 35%, தவெகவுக்கு 32%.. அதிமுகவுக்கு 30%.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் தகவல்.. தொங்கு சட்டசபையா?

vijay stalin
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்த புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத வகையில் ஒரு மும்முனை போட்டியை நோக்கி நகர்வது உறுதியாகியுள்ளது. 
 
இந்த கருத்துக்கணிப்பில் ஆளுங்கட்சியான திமுக 35% வாக்கு ஆதரவுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே நேரத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 32% வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, பெரிய கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
 
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 30% வாக்கு ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நெருக்கமான வாக்கு சதவீதங்கள் தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டசபை' அமைய வாய்ப்புள்ளதா என்ற விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. 
 
எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி ஆட்சிக்கான சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக பக்கம் சாய்ந்திருப்பதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva