1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kadambur raju joined in tvk today

காலம்தான் எவ்வளவு கொடியது?!.. பனையூர் அலுவலகத்தில் கடம்பூர் ராஜூ!.. வைரல் வீடியோ!..

kadambur
தற்போது தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது.
 
எம்.ஜி.ஆர் வாங்கியதை விட ஒரு சதவீதம் அதிகமாக விஜய் வாங்கியிருக்கிறார். அதாவது 35 சதவீத வாக்குகள் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக இரண்டாம் இடத்திற்கு சென்று கூட அதிமுகவோ மூன்றாம் இடத்திற்கு போய்விட்டது.
 
ஒருபக்கம் உள்கட்சி பூசல் காரணமாக அதிமுகவின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஏற்கனவே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல் அந்த 24 பேரில் நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்..
 
மேலும், அதிமுகவிலிருந்து பலரும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதில் கடம்பூர் ராஜும் ஒருவர். கொரோனா காலத்தில் விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸுக்கக காத்திருந்தபோது அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சென்று போய் பார்த்தார் விஜய்.

ஆனால் தற்போது விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் இன்று காலை பனையூர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருந்து கூட்டத்தில் ஒருவராக முண்டியடித்து உள்ளே போய் தவெகவில் இணைந்திருக்கிறார் கடம்பூர் ராஜு. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ‘காலம்தான் எவ்வளவு கொடியது?’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு.. தவெக அரசு தீர்த்து வைக்குமா?