1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TRB Opens Application Correction Window for Special TNTET and TET Candidates Until Nov 22

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு...

ஆசிரியர் தேர்வு வாரியம்
சிறப்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு  மற்றும் தகுதித் தேர்வு - அக்டோபர் 2026 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கான திருத்த அவகாசம்  20.11.2026 முதல் 22.11.2026 வரை வழங்கப்பட்டுள்ளது. 01.09.2025-க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
 
இணையவழி விண்ணப்பத்தை முழுமையாக சமர்ப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். திருத்தம் செய்த பிறகு அனைத்து பக்கங்களிலும் 'Submit' செய்து, இறுதியாக 'Final Submit' பொத்தானை அழுத்தி உறுதி செய்ய வேண்டும். 'Print Preview' பக்கத்தில் ஒப்புதல் அளித்த பின்னரே விண்ணப்பம் ஏற்கப்படும்.
 
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மாற்ற இயலாது. சாதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களில் மாற்றம் இருந்தால் கட்டண வித்தியாசத்திற்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார். கூடுதல் கட்டணம் தேவைப்பட்டால் முழுத் தொகையையும் மீண்டும் செலுத்த வேண்டும். குறைவாக கட்டணம் வந்தால் மீதித் தொகை திரும்ப வழங்கப்படாது. 22.11.2026-க்கு பிறகு எந்தவொரு திருத்த கோரிக்கையும் ஏற்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
குழந்தை இல்லையா? இனி லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்... தமிழக அரசின் இயற்கை கருத்தரிப்பு மையங்கள்...