1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 மே 2023 (11:03 IST)

அதிமுக கூட்டணிக்கு விசிக வரவேண்டும்: கடம்பூர் ராஜூ அழைப்பு..!

அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தலில் கூட்டணி என்பது வேறு உடன்பாடு என்பது வேறு என்றும் அவர் தெரிவித்தார். 
 
அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வந்தால் திருமாவளவனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
 
ஓபிஎஸ்,டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் அதிமுகவில் இனி இடம் இல்லை என்றும் அதிமுகவை மீட்போம் என்று சொல்வதற்கு டிடிவி தினகரனுக்கு தார்மீக உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
விஷச்சாராயம் விவகாரத்தில் அதிமுக தரப்பில் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran