விசிக பாஜக கூட்டணிக்கு வரவேண்டும்: திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த வானதி சீனிவாசன்..!
பாஜக மற்றும் பாமக இல்லாத கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெளிவாக கூறியுள்ள நிலையில் பாஜக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேண்டும் என கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என இன்று காலை திருமாவளவன் கூறிய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேண்டும் என வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
சமூக நீதிக்கு எதிரான கட்சி தான் திமுக என்றும் அந்த கூட்டணியை விட்டுவிட்டு பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும் என்றும் திமுக கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை திருமாவளவன் உணர்ந்துள்ளார் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார் அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva