ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (15:11 IST)

தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும் -திருமாவளவன்

தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி  நகர வேண்டுமென்று  விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கள்ள சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் முக. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதுரையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நச்சு சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  முதல்வர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்தாலும், தமிழக அரசு அதைத்தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

முதலமைச்சர் மதுவிலக்கை  நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதால்  தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.