1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (17:02 IST)

மன்னார்குடி ஜீயரை கண்டித்து 3 நாள் ஆர்ப்பாட்டம்: கீ.வீரமணி அறிவிப்பு

veeramani
மன்னார்குடி ஜீயரின் பேச்சை கண்டித்து மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 
 
மன்னார்குடி ஜீயரை கண்டித்து மே 8ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கி வீரமணி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நெய்வேலியில் வஞ்சிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் உரிமைப்போராட்டம் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவி கரையான்கள் கல்வியை செல்லரிக்கும் நிலைக்கு கண்டனம் தெரிவித்து மே 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார் 
 
8ஆம் தேதி, 9ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கி வீரமணி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.