1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:42 IST)

இந்தி திணிப்பு முயற்சி: போராட்டத்தை அறிவித்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்!

hindi
ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா பேசிய ஹிந்தி மொழி குறித்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகவும் அந்த முயற்சிகளுக்கு எதிராக மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு தொகுதி தனியார் பயிற்சி மையத்தை ஊக்குவிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது 
 
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்