1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. judgement on sathankulam murder case

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

jayaraj
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வசித்து வந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020ம் வருடம் அந்த பகுதி போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கினர். அதில் படுகாயமடைந்து அவர்கள் பரிதாபமாக இறந்து போனார்கள்.

இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவரும் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இந்த கொலை வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.. அது தொடர்பான வழக்கு மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. கடந்த மார்ச மாதம் 23ம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.அதோடு ஏப்ரல் 6ம் தேதியான அன்று அவர்களுக்கு என்ன தண்டனை என்கிற தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறி இருந்தார்..

அதன்படி தீர்ப்பை வாசித்த நீதிபதி ‘பழிவாங்கும் நோக்கத்துடன் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரும் அடித்து கொல்லப்படிருக்கிறார்கள். காவல்துறை மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது. சட்டதிட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டிருக்கிறார்கள். எங்கு அதிகாரம் இருக்கிறதோ அங்கு பொறுப்பும் இருக்கவேண்டும். தந்தை, மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது. இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள். இது கொடுமையான செயல் என தெரிவித்தார்.

அதன்பின் தண்டனை விபரங்களை அறிவித்த நீதிபதி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் 15 லட்சம் அபராதம், மேலும், மற்ற 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதோடு, தந்தை மகன் இருவரையும் கொலை செய்ததால் அனைவரையும் இரண்டு முறை தூக்கில் போடுங்கள் எனவும் நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..