1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Judge Vaithiyanadhan about Jinpin arrive

”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி??

சென்னை
பிரதமர் மோடியும் சீன பிரதமர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இது குறித்து கருத்து தெரிவித்தள்ளார்.

சீன பிரதமர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னை சாலைகளில் உள்ள வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல சாலைகள் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன், சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது, அது போல் மற்ற உலகத் தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என கூறியுள்ளார்.

நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்து, பாராட்டுவதாக அமைந்துள்ளதா?, அல்லது கிண்டலாக அமைந்துள்ளதா? என்பது ஆய்வுக்குரியது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
காருக்குள் காதல் ஜோடி: மரணத்தின் மர்மம் விலகல்!