பண்டிகை கால தங்க விற்பனை – 50 சதவீதம் வீழ்ச்சி !

Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (13:16 IST)
தீபாவளி மற்றும் அக்‌ஷய திருதியை ஆகிய பண்டிகைக் காலங்களில் தங்க விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் முதலாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. உலக பொருளாதார மாற்றங்கள் தங்கம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கொஞ்சமாக வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் மீண்டும் விலை உயர ஆரம்பித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தீபாவளி, அக்‌ஷய திரிதியை போன்ற பண்டிகைகளின் போது தங்க விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு கடந்த ஆண்டு விற்பனையில் பாதி கூட விற்பனை ஆகாது என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. தங்க விற்பனை விழ்ச்சிக்கு நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :