தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவதன் மர்மம் என்ன? அன்புமணி கேள்வி..!
- பாஜகவுடன் கூட்டணி முறிவா? அதிமுக மா.செ., கூட்டத்தில் ஆலோசனை
- அண்ணாமலை உண்மை மட்டுமே பேசுவார்.. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..!
- வரலாறு தெரியாமல் விமர்சிக்கும் அண்ணாமலை - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
- ''அண்ணாமலை சிங்கம்.... அவர் உண்மையைத்தான் பேசுவார்'' - நடிகை குஷ்பு
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைக்குத்தான் போயிருப்பார்: பத்திரிகையாளர் மணி
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குத்தான் போயிருப்பார் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
முன்னணி ஊடகத்திற்கு பேட்டி அளித்த பத்திரிக்கையாளர் மணி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் சிறை சென்றார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷம் விட்டு வருகின்றனர்.
அண்ணாமலை கூறியதில் எந்த தவறும் இல்லை, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது ஜெயலலிதா விஷயத்தில் தான். ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை இந்த விஷயத்தை கூறியதன் உள்நோக்கம் என்ன என்பதை குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்
Edited by Siva
