வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (12:14 IST)

ஜெயலலிதா கழுத்தில் குத்தப்பட்டு, படியில் தள்ளி விடப்பட்டாரா?: திவாகரன் மீது பகீர் குற்றச்சாட்டு!

ஜெயலலிதா கழுத்தில் குத்தப்பட்டு, படியில் தள்ளி விடப்பட்டாரா?: திவாகரன் மீது பகீர் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதான கட்சியினர் முன் வைக்கும் பிரச்சாரம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தான்.


 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பினார். இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திலும் அவரது அணியினர் முன் வைத்து வருகின்றனர்.
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக உள்ள அனைவரும் பரவலாக பேசுவது ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் சசிகலா மற்றும் அவரது குடும்பன் தான் என்பது. தேர்தல் பிரச்சாரத்திலும் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்தார் என ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

நன்றி: Red Pix
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் சசிகலா அணியை சரமாரியாக விமர்சித்து பேசினார். அவர் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ததாக கூறினார்.
 
மேலும் ஜெயலலிதாவை திவாகரன் கழுத்தில் குத்தி, படிக்கட்டில் தள்ளிவிட்டு கொலை செய்தார் என ஒரே போடாக போட்டார். மேலும் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டினார்.