தயவு செய்து உங்கள் விவசாயிகளுக்காக போராடுங்கள் - கெஞ்சும் கர்நாடக விவசாயி (நெகிழ்ச்சி வீடியோ)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்களத்திலேயே உண்பதும், உறங்குவதும், எலிக்கறி சாப்பிடுவதாக அவர்கள் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கர்நாடக விவசாயிகள் டெல்லி சென்று தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
அதில் ஒருவர் உணர்ச்சிகரமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.