1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalitha health affected by asset case

ஜெ.விற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது எப்படி? - சசிகலா வாக்குமூலம்

Jayalalitha
உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

 
அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
 
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா, விசாரணை ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரம்மாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெ.வின் உடல்நிலை எப்படி பாதிக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் ஜெயலலிதாவிற்கு இருந்தது. இதனாலேயே அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது மனதளவில் அவருக்கு வேதனை அதிகரித்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரித்தது. அதன் பின் அந்த வழக்கில் விடுதலை ஆகி வெளிவந்த பின்பு அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார் என சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இதிலிருந்து, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா மனதளவில் பாதிக்கப்பட்டு, பின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
அப்போலோவில் ஜெ.வை யாரெல்லாம் பார்த்தனர் - சசிகலா வாக்குமூலம்