திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (12:43 IST)

யுவன் சங்கர் ராஜாவைப் பாராட்டிய சிம்பு

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பாடிய பாடல் ஹிட்டானதால், யுவனை அழைத்துப் பாராட்டியுள்ளார் சிம்பு. 
மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற  பாடல்  மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில்  ரசிக்கப்பட்டிருக்கிறது இப்பாடல். 
 
பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது கூடுதல் சுவை. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ‘இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று  இருவரிடமும் சொல்லி  மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.