1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar warned to bjp

அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்: பாஜகவுக்கு ஜெயகுமார் எச்சரிக்கை..!

jayakumar
அதிமுகவை சீண்டினால் எதிர் வினை பயங்கரமாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகியை நேற்று சஸ்பெண்ட் செய்த பாஜக இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது. இது அதிமுக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.ல்
 
இந்த நிலையில் இது குறித்து ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும் அதிமுகவின் சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
ஜெயக்குமாரின் இந்த எச்சரிக்கைக்கு பாஜக தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னை கல்லூரி மாணவி கைது: அதிர்ச்சி தகவல்..!