திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (18:49 IST)

தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் பாதிப்பு- டிடிவி தினகரன்

ttv dinakaran
அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி. தினகரன்  நீக்கப்பட்ட நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி  டிடிவி.தினகரனால் தொடங்கப்பட்ட கட்சி அமமுக. இக்கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னையிலுள்ள அமமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சித்து,  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது:

தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ரவுடிகளைப் போல  திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார்.

தி.மு.க.வினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? என்று தெரிவித்துள்ளார்.