அதிமுக தலைமையை விமர்சனம் செய்ய கூடாது: பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு..!
அதிமுக தலைமை குறித்தோ, அதிமுக தொண்டர்கள் குறித்தோ கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா கட்டுப்பாடு விதித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறியும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்துவிட்டு அதன் பிறகு டெல்லி திரும்பிய ஜேபி நட்டா தற்போது தமிழக பாஜகவினருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமை குறித்தோ தொண்டர்கள் குறித்தோ யாரும் எந்தவிதமான குறையும் கூறக்கூடாது என்றும் இதை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
Edited by Siva