1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says Duraimurugan is welcomed to DMK

அதிமுகவிற்கு வரும் துரைமுருகன்? சிவப்பு கம்பளம் விரிக்க காத்திருக்கும் ஜெயகுமார்!

ஜெயகுமார்
திமுக துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் அவரை வரவேற்க தயார் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் செய்தியார்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக ஒரு ஆலமரம். திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். கு.க செல்வம் கட்சியில் இருந்து விலகியது உள்கட்சி விவகாரம். 
 
திமுகவின் முதல் விக்கெட் கு.க செல்லம். துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு தான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவர் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் அதிமுக நல்ல முடிவை எடுக்கும்.  அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.
About Writer
Sugapriya Prakash