அண்ணாவை தொடர்ந்து கருணாநிதியும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு??
கருணாநிதி இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார் என கே.பி.ராமலிங்கம் கருத்து.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி காலமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுறுகின்றது. எனவே கழகத்தினர் கலைஞரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது கலைஞர் இருந்து இருந்தால் புதிய கல்வி கொள்கையை ஆதரித்திருப்பார். புதிய கல்வி கொள்கையின் முழு பயன்களை அறியாமல் புரியாமல் சிலர் எதிர்த்து வருகின்றனர்.
கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரம் மாதம் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக நிறுவனரான அண்ணாவே இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்ததாக பாஜக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.