ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (16:39 IST)

திமுகவிற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான்; ஜெயகுமார் பேட்டி..!

திமுகவுக்கு இணை ஒவ்வொரு மாதமும் கைது மாதம்தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்புள்ளது என்று கூறிய ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம் என்று தெரிவித்தார். 
 
தேவையற்ற பெட்டிகளை கழற்றிவிட்ட பின் அதிமுக ரயில் ஜோராக சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய அவர் திமுகவுக்கு இந்த இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம்தான் என்றும் ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
 
விஜய் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அப்படி வந்தால் தான் அதில் உள்ள நிலையில் சொல்லிவுகள் பற்றி தெரியவரும் என்றும் கூறினார்.
 
Edited by Siva