திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (11:06 IST)

ஈபிஎஸ் இடை சறுகலாக வந்தவர்... நாஞ்சில் சம்பத் அதிரடி!

ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டு ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள் என நாஞ்சில் சம்பத் பேட்டி. 

 
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் அதிமுகவில் நடப்பவை குறித்து நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டு ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடை சறுகலாக வந்தவர். உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை என்பதைவிட அதன் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள்.
 
இதற்கு பின்னால் பாஜக விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். இது தெரியமால் அதிமுக பலியாகியிருக்கிறது என தெரிவித்தார்.