வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (18:04 IST)

முன்னாள் அமைச்சருக்கு கொலைமிரட்டல்.....

ADMK
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், அதிமுக சசிகலா தலைமைக்கு வந்தார். ஆனால், அவர் ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேர்ந்ததால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்க வைத்தனர்.

அப்போது, சசிகலாவுன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு விலகியிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினர்.

இதில்,அதிமுக ஒருங்கிணைப்பாளராக  ஓபிஎஸும்,  துணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் இருந்தனர்.

சமீபத்தில் ஒற்றைத்தலைமை பிரச்சனை அதிமுகவில் எழுந்துள்ள நிலையில், சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் எட்பபாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத்தலைமை வேண்டும் என தன் கருத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக மர்ம  நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் புகார் அளித்துள்ளார்.