1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (10:47 IST)

மருது அழகுராஜ் கூலிக்கு வேலை செய்கிறார்: ஜெயகுமார் கடும் விமர்சனம்!

jayakumar
நேற்று எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஜெயகுமார் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருது அழகுராஜ் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டதாகவும், எடப்பாடிபழனிசாமி சுயநலமாக செயல்படுகிறார் என்றும் கூறினார்.
 
மேலும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் மருது அழகுராஜ் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டு மருதராஜ் கூலிக்கு வேலை செய்து வருகிறார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜெயகுமாரின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது