நதிகாக்கும் இரு கரைகள் தகர்ந்தது! – நமது அம்மா இதழ் ஆசிரியர் விலகல்!
நமது அம்மா நாளிதழில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட நிலையில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா” இதழில் ஆசிரியராக பொறுப்பில் இருப்பவர் பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கும் இவர் போட்டியிட்டார்.
சமீப காலமாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை விவகாரத்தால் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நமது அம்மா நாளேட்டின் நிறுவனர் என்ற பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனது ”நமது அம்மா” நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை விட்டு விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.